செய்திகள்
திமுக எம்பி கனிமொழி

கொரோனா மரணங்களுக்கு முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் - கனிமொழி

Published On 2020-08-24 09:23 GMT   |   Update On 2020-08-24 09:23 GMT
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரின் மரணங்களுக்கும் தமிழக முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பாடில்லை. தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,79,385 ஆக உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,517 ஆக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 6 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோரின் மரணங்களுக்கும் தமிழக முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

இது குறித்து திமுக எம்பி கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நாட்டிலேயே மிகச்சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பு இருந்தும் தமிழகம் 6 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட இறப்புகளை எட்டியுள்ளது என்றும், இது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு, 2021 தேர்தலை மனதில் வைத்து, அதிமுக அரசின் சாதனையாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சித்தரிப்பதே காரணம். 6400 இறப்புகளுக்கு எடப்பாடி அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News