செய்திகள்
முக ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

Published On 2020-08-15 02:53 GMT   |   Update On 2020-08-15 02:53 GMT
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை:

இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தினத்தையொட்டி முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News