செய்திகள்
ஆதனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்த காட்சி.

ஆதனூர் ஊராட்சியில் ரூ.57 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்- அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு

Published On 2020-08-09 10:14 GMT   |   Update On 2020-08-09 10:14 GMT
ஆரணியை அடுத்த ஆதனூர் ஊராட்சியில் ரூ.57 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
ஆரணி:

ஆரணியை அடுத்த ஆதனூர் ஊராட்சியில் பழமைமிகு செல்லியம்மன் கோவில் உள்ளது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி ரூ.32 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. அதேபோல் ஆதனூர் காலனி பகுதியில் ரூ.10 லட்சத்தில் புதிதாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியும், மைனந்தல் செல்லும் சாலையில் சாலையோரம் தடுப்பணை அமைக்கும் பணி ரூ.5 லட்சத்திலும் என ரூ.57 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார்.

அவருடன் ஆவின் துணைத் தலைவர் பாரி பி.பாபு, அரசு வக்கீல் கே.சங்கர், மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், ஆரணி ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், ஊராட்சி மன்றத் தலைவர் மாலதிசிவானந்தம், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் சென்றிருந்தனர்.
Tags:    

Similar News