செய்திகள்
குடியிருப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தச்சூரில் நரிக்குறவர் குடியிருப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2020-08-05 15:13 GMT   |   Update On 2020-08-05 15:13 GMT
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், தச்சூரில் நரிக்குறவர் குடியிருப்பு பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆரணி:

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், தச்சூர் கிராமத்தில் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இருளர் சமுதாய மக்கள் மற்றும் நரிக்குறவர்கள் 80-க்கும் மேற்பட்டோர் வீடு இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக முள்ளிப்பட்டு கூட்ரோடு அருகே உள்ள அர்ச்சுணன் குளம் சீரமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், தாசில்தார் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஒன்றிய பொறியாளர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News