செய்திகள்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ஒரு பெண்ணுக்கு நிதியுதவியை கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. வழங்கியபோது எடுத்தபடம்.

தனிமைப்படுத்தப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிதியுதவி

Published On 2020-08-05 07:52 GMT   |   Update On 2020-08-05 07:52 GMT
தனிமைப்படுத்தப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிதியுதவியை கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. வழங்கினார்.
வால்பாறை:

வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது. எனவே அந்த குடியிருப்புக்கு அருகில் வசித்து வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வால்பாறை கூட்டுறவு நகர வங்கி தலைவரும், தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர் வீட்டுவசதி வாரிய குழு உறுப்பினருமான வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில்கணேசன் முன்னிலை வகித்தனர். இதில் கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 13 பேருக்கும் தலா ரூ.1000 நிதியுதவி வழங்கினார்.

பின்னர் அவர் வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதையும், படகு இல்ல பணியையும் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். இதில் மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், நகர கழக துணை செயலாளா பொன்கணேஷ், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன் மற்றும் நிர்வாகிகள் மணிகண்டன், சசிக்குமார், சண்முகம், வக்கீல் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News