செய்திகள்
ஆர்ப்பாட்டம்

நல்லம்பள்ளி அருகே டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-05 07:21 GMT   |   Update On 2020-08-05 07:21 GMT
தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லம்பள்ளி அருகே தடங்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லம்பள்ளி அருகே தடங்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் மணி, ஜெயராமன், சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரங்கநாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பணியின்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தரமான முககவசங்கள், கையுறை, கிருமிநாசினி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கும் போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சங்க நிர்வாகிகள் 5 பேர் மீது அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News