செய்திகள்
ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி

Published On 2020-07-28 12:45 GMT   |   Update On 2020-07-28 12:45 GMT
சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி சுப்பிரமணிய சாமி கோவிலில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி:

சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி சுப்பிரமணிய சாமி கோவிலில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கி உணவுகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி சுப்பிரமணிய சாமி கோவிலில் தினமும் அன்னதான திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. தினமும் 25 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. அங்கு அதிகமான ஏழைகள் உணவுக்காக வருகிறார்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும். தற்போது புளி, தயிர், தக்காளி சாதங்கள் வழங்கப்படுகிறது. ஏழை மக்களுக்கு சாம்பார் சாதம், காய்கறிகளுடன் கூடிய உணவு வழங்க வேண்டும். தினமும் 100 ஏழை மக்களுக்கு உணவு வழங்கிட வேண்டும். மேலும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு முககவசம் உள்ளிட்டவை வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நுகர்வோர் சங்க மாநில துணை தலைவர் பிரேமலதா, மாநில இணை செயலாளர் நல்லசாமி, நகர தலைவர் ஆகாஷ், நகர செயலாளர் தீனா, பொருளாளர் ஹரி, மகராஜகடை ஒன்றிய செயலாளர் சக்திகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News