செய்திகள்
தமிழகம், புதுச்சேரிக்கான கடற்படை தளபதி புனித் சதா

ராமேசுவரம் கடற்படைக்கு 2 அதிவேக படகுகள்: தமிழகம்-புதுச்சேரிக்கான தளபதி பேட்டி

Published On 2020-07-23 09:25 GMT   |   Update On 2020-07-23 09:25 GMT
ராமேசுவரம் கடற்படை முகாமிற்கு பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிக்காக சென்னையில் இருந்து புதிதாக 2 அதிவேக படகுகள் வழங்கப்பட உள்ளன.
ராமேசுவரம்:

ராமேசுவரம் கடல் பகுதியின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக நேற்று சென்னையில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கான கடற்படை தளபதி புனித் சதா வருகை தந்தார். பின்னர் அவர் ராமேசுவரம் கடற்படை தளம், ரோந்து படகுகள் நிறுத்தப்படும் தளம் மற்றும் குந்துகால் கடற்கரை பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடற்படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. ராமேசுவரம் கடல்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கடற்படை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ராமேசுவரம் கடற்படை முகாமிற்கு பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிக்காக சென்னையில் இருந்து புதிதாக 2 அதிவேக படகுகள் வழங்கப்பட உள்ளன. இன்னும் 2 மாதத்தில் அந்த 2 அதிவேக படகுகள் வரும். இந்த 2 படகுகளும் பாம்பன் குந்துகால் பகுதியில் கட்டப்பட்டுள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு மன்னார்வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News