செய்திகள்
பிளாஸ்மா தானம்

ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 32 பேர் ‘பிளாஸ்மா’ தானம்

Published On 2020-07-23 06:57 GMT   |   Update On 2020-07-23 06:57 GMT
கொரோனாவில் இருந்து குணமடைந்த ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் 32 பேரின் ‘பிளாஸ்மா’ தானமாக பெறப்பட்டு உள்ளது.
சென்னை:

கொரோனாவால் பாதிக்கப்படும் ரெயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு பெரம்பூரில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக அங்கு 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சை பெற்றவர்களில் 484 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 55 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்த ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் 32 பேரின் ‘பிளாஸ்மா’ தானமாக பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது குணமடையும் ரெயில்வே ஊழியர்களிடம் இருந்து ‘பிளாஸ்மா’ பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News