செய்திகள்
விஜயதரணி எம்எல்ஏ

நாகர்கோவிலில் நகர ஊரமைப்பு துறை அலுவலகம் அமைத்திட வேண்டும்- விஜயதரணி கோரிக்கை

Published On 2020-07-21 08:34 GMT   |   Update On 2020-07-21 08:34 GMT
நாகர்கோவிலில் நகர ஊரமைப்பு துறை அலுவலகம் அமைத்திட வேண்டும் என்று விஜயதரணி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
கருங்கல்:

விஜயதரணி எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

வீட்டு வசதி, நகரமைப்பு துறை சார்பில் குமரி மாவட்டத்தில் வணிக வளாகம் மற்றும் ஓட்டல்கள், பெரிய வீடுகள் கட்ட, ரியல் எஸ்டேட் நிலங்கள் பிரித்து அனுமதி பெற்றிட நெல்லை துணை இயக்குனர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள பனச்சமூடு, மார்த்தாண்டம், களியக்காவிளை, அருமனை, குலசேகரம், ஆறுகாணி, பத்துகாணி, கொல்லங்கோடு, கோழிவிளை, நித்திரவிளை போன்ற பல்வேறு இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் பிளாட்கள் அனுமதி பெற்றிடவும் நெல்லைக்கு சென்று வர, பொதுமக்களுக்கு ஒரு நாள் முழுவதும் வீணாகிறது. எனவே, குமரி மாவட்ட மக்களின் நலன் கருதி நெல்லையில் செயல்படும் நகர ஊரமைப்பு துறையிடம் இருந்து எங்கள் மாவட்டத்தை பிரித்து நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அமைத்து அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News