செய்திகள்
கோப்புப்படம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி

Published On 2020-07-16 03:22 GMT   |   Update On 2020-07-16 03:22 GMT
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை:

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்தது.

மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 9.30 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதற்கு முன்பாக தேர்ச்சி விகிதம் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக அரசு வெளியிட்டது. தமிழகதில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 94.8 சதவீத பேரும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் மாணவர்களை விட 5.39 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 96.99 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 96.39 சதவீதம் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresult.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். 
Tags:    

Similar News