என் மலர்

  நீங்கள் தேடியது "Public Exam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்வதிலும் அரசிடம் நிதி பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது
  • 11ஆம் வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தகவல்

  சென்னை:

  தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.

  இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் துறைச் செயலாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

  இதில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறியதாவது:-

  பள்ளிக்கல்வித்துறையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது. இதற்குரிய இடங்கள் இருந்தும், தேவையான நிதிகள் ஒதுக்கப்படாமல் உள்ளது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க வேண்டியுள்ளது.

  பள்ளிக்கல்வித் துறையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில், ஆண்டுதோறும் காலியாகும் இடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லாத நிலைமை உள்ளது. இதற்காக தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்வதிலும் அரசிடம் நிதி பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், ஆசிரியர்களை நியமனம் செய்ய இயலாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

  11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன. 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கலாம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டியில் உள்ள நல்லழகு நாடார் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்.
  • அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் மாணவ-மாணவிகளை வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

  விளாத்திகுளம்:

  விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டியில் உள்ள நல்லழகு நாடார் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்.

  மேலும் அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் மாணவ-மாணவிகளை வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

  இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் பன்னீர்செல்வம், வழக்கறிஞர் ரெபேக்கா அனிட்டா மார்கண்டேயன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சமூகவலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், உட்பட கிளைச் செயலாளர்கள் ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.
  • விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

  சென்னை:

  தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகியது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

  அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

  பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 14-ந்தேதி (நாளை) வியாழக்கிழமை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 43 பேரில் 5 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
  • தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 802 பேரில் 7 ஆயிரத்து 721 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

  புதுச்சேரி:

  புதுவையில் கடந்த மே மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

  புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் 90.90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளியில் 81.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 142 மாணவர்கள், 7 ஆயிரத்து 703 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 845 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

  இதில் 6 ஆயிரத்து 153 மாணவர்கள், 7 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

  புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 43 பேரில் 5 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

  தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 802 பேரில் 7 ஆயிரத்து 721 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

  புதுவையில் மட்டும் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 5 ஆயிரத்து 451 பேரில் 4 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 15 பேரில் 6 ஆயிரத்து 954 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  காரைக்காலில் மட்டும் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய ஆயிரத்து 592 பேரில் ஆயிரத்து 279 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 787 பேரில் 767 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 155 அரசு, தனியார் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

  புதுவையில் மட்டும் 58 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

  புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவையில் ஒரு பள்ளி மட்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

  புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் இயற்பியல் 17, வேதியியல் 4, உயிரியல் 34, கணிப்பொறி அறிவியல் 24, கணிதம் 17, பொருளியல் 23, வணிகவியல் 21, கணக்குப்பதிவியல் 43, வணிக கணிதம் 5, கணிணி பயன்பாடு 60, விலங்கியல் 2 பேர் என மொத்தம் 250 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பிளஸ்-1 தேர்ச்சியில் மாணவர்களை விட மாணவியர் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • மொத்தம் 90.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  சென்னை:

  பிளஸ்-1 தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட் டுள்ளது.

  தமிழகம்-புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு எழுதிய மொத்த மாணவ-மாணவிகள் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் ஆகும்.

  இதில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவிகளும் (94.99 சதவீதம்), 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்களும் (84.86 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி அடைந்துள்ளார்.

  பிளஸ்-1 தேர்ச்சியில் மாணவர்களை விட மாணவியர் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 90.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  கடந்த மார்ச் 2020-ல் தேர்ச்சி 96.04 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,605. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி எண்ணிக்கை 103. அறிவியல் பாடத்தில் 93.73 சதவீதம், வணிகவியல் பாடப்பிரிவில் 85.73 சதவீதம், கலைப்பிரிவுகளில் 72.49 சதவீதம் தொழிற்பாட பிரிவுகளில் 76.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  இயற்பியல் 94.56 சதவீதம், வேதியியல் 94.42 சதவீதம், உயிரியல் 95.99 சதவீதம், கணிதம் 95.56 சதவீதம், தாவரவியல் 87.98 சதவீதம், விலங்கியல் 87.96 சதவீதம், கணினி அறிவியல் 98.60 சதவீதம், கணக்குப் பதிவியல் 87.91 சதவீதம் தேர்ச்சி சதவீதமாக உள்ளது.

  100 சதவிகிதம் மதிப் பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை இயற்பியல் 714, வேதியியல் 138, உயிரியல் 383, கணிதம் 815, தாவரவியல் 3, விலங்கியல் 16, கணினி அறிவியல் 873, வணிகவியல் 821, கணக்கு பதிவியல் 2,163, பொருளியல் 637, கணினி பயன்பாடு-2,186, வணிக கணிதம் மற்றும் புள்ளியல் 291 ஆகும்.

  4,470 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில் 3,899 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 99 பேர் தேர்வு எழுதியதில் 89 பேர் தேர்ச்சி பெற்றனர்.

  கடந்த 2020-ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 677. இந்த ஆண்டு தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 376 ஆகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
  • 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

  சென்னை:

  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பப்பட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

  பிளஸ் 1 தேர்வு எழுதியவர்களில் 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

  10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 95.44% தேர்ச்சியுடன் 2ம் இடத்தையும், மதுரை மாவட்டம் 95.25% தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • இணையதளங்கள் மூலம் மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. மொத்தம் 8,83,882 பேர் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பப்பட்டுள்ளது.

  www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
  • இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், 12ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள்.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. மொத்தம் 8,83,882 பேர் தேர்வை எழுதினர். இதில் மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேர் பங்கேற்றனர்.

  இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

  இதனிடையே, இந்த தேர்வில் தோல்வி அடையும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 12ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்றும், தோல்வி அடைந்த பாடங்களை அடுத்து நடைபெறும் சிறப்பு தேர்வில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட இருப்பதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
  • தேர்வர்கள் இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  சென்னை:

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்பட இருப்பதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வு தோல்வி எதிரொலியாக 28 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.
  • அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

  சென்னை:

  தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவு நேற்று வெளியாகின. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர் தேர்வு எழுதினார்கள். அந்த வகையில் 31 ஆயிரத்து 44 பேர் தேர்வை எழுதவில்லை.

  பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.

  10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 42 ஆயிரத்து 519 பேர் தேர்வு எழுதவில்லை.

  தேர்வு எழுதியவர்களில், 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவர்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும்.

  இந்த நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி ஆலோசனைகளை வழங்க கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வரும் சூழலில், பொதுத்தேர்வில் தோல்வி எதிரொலியாக தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவர்களில் 10 பேர் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள்.

  தேர்வு தோல்வி எதிரொலியாக 28 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். அவர்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 16 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 12 பேரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

  இந்த தற்கொலை சம்பவம் பெரும்பாலும் வடமாவட்டங்களில் நடந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர், அரியலூர், கரூர், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

  தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 28 மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்தும் கல்வித்துறை அவ்வப்போது தகவல்களை சேகரித்து வருகின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
  • 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

  சென்னை:

  தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவு நேற்று முன்தினம் வெளியாகின. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவர்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

  இந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 29ம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print