எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
Published on: 
Summary

2027 மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட இருக்கிறார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை கல்வியாண்டின் இடையில் வெளியிடப்பட்டு வருகிறது. அதாவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டில் (2025) தாமதமாக நவம்பர் மாதம் 4-ந்தேதி வெளியானது. அதற்கு முந்தைய ஆண்டில் (2024) அக்டோபர் 14-ந்தேதி வெளியிடப்பட்டு இருந்தது.

கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் சட்டசபை பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு முன்கூட்டியே அட்டவணை வெளியிட்டு, நடத்தியும் முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் 2027 மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிட இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com