10-ம் வகுப்பு துணைத்தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

துணைத்தேர்வு ஜூலை மாதம் 8-ந்தேதி முதல் 15 வரை நடைபெற உள்ளது.
10-ம் வகுப்பு துணைத்தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியானது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஆன்லைனில் அவர் வெளியிட்டார். இதில் 94.31 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத, தோல்வி அடைந்த மாணவ-மாணவிகளுக்கான துணைத்தேர்வு ஜூலை மாதம் 8-ந்தேதி முதல் 15 வரை நடைபெற உள்ளது.

துணைத்தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலும் இன்று முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com