2027-ம் கல்வியாண்டிற்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

12ம் வகுப்பு தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Minister Rajmohan
Published on: 
Summary

2027-ம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ம் ஆண்டு பொதுத்தேர்வு உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை கல்வியாண்டின் இடையில் வெளியிடப்பட்டு வருகிறது. அதாவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டில் (2025) தாமதமாக நவம்பர் மாதம் 4-ந்தேதி வெளியானது. அதற்கு முந்தைய ஆண்டில் (2024) அக்டோபர் 14-ந்தேதி வெளியிடப்பட்டு இருந்தது.

கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் சட்டசபை பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு முன்கூட்டியே அட்டவணை வெளியிட்டு, நடத்தியும் முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் 2027 மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தற்போது வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் அறிவித்ததாவது:-

10ம் வகுப்பு தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும்.

மார்ச் 17- தமிழ்

மார்ச் 25- ஆங்கிலம்

மார்ச் 31- கணிதம்

ஏப்ரல் 5- அறிவியல்

ஏப்ரல் 9- சமூக அறிவியில்

ஏப்ரல் 12- விருப்ப மொழி

12ம் வகுப்பு தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மார்ச் 3- தமிழ், பிற மொழிப்பாடங்கள்

மார்ச் 8- ஆங்கிலம்

மார்ச் 12- வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல்

மார்ச 15- கம்ப்யூட்டர் சயின்ஸ்/ பயோ கெமிஸ்ட்ரி/ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்/ கம்யூனிகேட்டங் ஆங்கிலம்/ எதிக்ஸ் அண்டு கல்ச்சர்/ அட்வான்ஸ்டு லாங்குவேஜ்/ ஹோம் சயின்ஸ்/ பொலிட்டிகள் சயின்ஸ்/ ஸ்டாட்டிக்ஸ்/ நர்சிங்/ பேசிக் எலக்ட்ரிகல் என்ஜினீரிங்.

மார்ச் 19- உயிரியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணக்கியல்/ பேசிக் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜீனிரிங்.

மார்ச் 23- இயற்பியல், பொருளாதாரம், எம்ப்லாயபிலிட்டி ஸ்கில்ஸ் தேர்வுகள் நடைபெறும்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 20ம் தேதி வெளியிடப்படும்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com