செய்திகள்
நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.

பல்லடத்தில் நாதஸ்வர கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி- கரைப்புதூர் நடராஜன் எம்எல்ஏ வழங்கினார்

Published On 2020-07-15 13:50 GMT   |   Update On 2020-07-15 13:50 GMT
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 நாதஸ்வரம் மற்றும் தவில்கலைஞர்களுக்கு பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் தனது சொந்த செலவில் தலா 10 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு உள்ளிட்டவற்றை பல்லடம் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
பல்லடம்:

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவினால் திருமணம் ,கோவில்திருவிழா நடைபெறவில்லை. இதனால் பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 நாதஸ்வரம் மற்றும் தவில்கலைஞர்களுக்கு பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் தனது சொந்த செலவில் தலா 10 கிலோ அரிசி, அரைகிலோ பருப்பு உள்ளிட்டவற்றை பல்லடம் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர்கள் வைஸ்பழனிசாமி, தர்மராஜ்,சரளை விக்னேஷ், தமிழ்நாடு பழனிச்சாமி, மரக்கடைகிருஷ்ணமூர்த்தி, தங்கவேல், குங்குமம் சிவகுமார், கயாஸ்அகமது, நாதஸ்வர, தவில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News