செய்திகள்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-14 11:14 GMT   |   Update On 2020-07-14 11:14 GMT
நாமக்கல் பூங்கா சாலையில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல்:

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மணல், கருங்கல் எடுக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுமான தொழிலை பாதுகாத்திட வேண்டும். வருமானவரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் 6 மாதத்திற்கு தலா ரூ.7,500 வீதம் கொரோனா நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News