search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker struggle"

    வேலூரில் வருகிற 31-ந்தேதி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    வேலூர்:

    அரக்கோணம் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்களை சரியான அளவில் எடைபோடாமல் அனுப்பப்படுகிறது.

    இந்த செயலை கண்டித்து ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்கள் அனைத்தும் லாரியில் வரும் எடைதராசில் சரியான அளவில் எடையிட்டு அந்தந்த மாதத்திற்கான கலர்நூல் தையலிட்டு விற்பனையாளர் முன்பாக கடையிலேயே வழங்க கோரியும் தொடர்ந்து இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதை மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாநில மையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட செயற்குழு கூட்டத்தின் முடிவின்படியும் மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வருகிற 31-ந்தேதி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் ரேசன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று பேசுகிறார். மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் தனியார் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 250 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.232 வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் மற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடனும், தனியார் நிர்வாகத்திடனும் பலமுறை கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு தொழிலாளர்கள் 50 பேர் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவலறிந்து அங்கு விரைந்து மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூடுதல் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    அதன்பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

    திண்டுக்கல்லில் ஒர்க்ஷாப் தொழிலாளர்கள், டிரைவிங் பயிற்சி பள்ளி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    நாட்டில் ஏற்படும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை திருத்த முடிவு செய்தது. அதன்படி பல முக்கிய அம்சங்களை கொண்ட வரைவு சட்ட திருத்தத்தை உருவாக்கி உள்ளது.

    இதில் விபத்தை ஏற்படுத்துவது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது.

    மேலும் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாபஸ் பெற கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் ஒர்க்ஷாப் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர், டிரைவிங் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். #struggle

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகளில் 100 துப்புரவு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்த வாசுதேவன், பாண்டியன், பாலாமணி, மணி ஆகிய 4 பேரையும் கடந்த 27-ந் தேதி பணியிடமாற்றம் செய்ய உத்திரவிட்டனர். அவர்களை பணியிடம் மாற்றம் செய்யகூடாது என்று இன்று காலை திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு மற்ற தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவல் அறிந்து நகராட்சி ஆணையாளர் (பொ) சுகுமார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் பணியிட மாற்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று சுகுமாரிடம் கூறினர். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். துப்புரவு பணிக்கு செல்லாததால் தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். #struggle

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 32 புக்கிங் ஏஜெண்டுகள் உள்ளனர். இவர்கள் மூலம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு காய்கறிகள் ஏலக்காய், முருங்கை, நெல்லிக்காய், வாழை இலை, மலர்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தினசரி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் 10 டன் அளவுக்கு விளை பொருட்கள் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திண்டுக்கல் கோட்ட வர்த்தக அலுவலராக பொறுப்பேற்றுள்ள ஜெயச்சந்திரன் என்பவர் கடந்த சில மாதங்களாக புக்கிங் ஏஜெண்டுகள் மூலம் எந்த பொருட்களையும் ரெயிலில் ஏற்றக் கூடாதுஎன உத்தரவு பிறப்பித்தார்.

    கடந்த 4 நாட்களாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரெயில்கள் மூலம் காய்கறிகள் மற்றும் விளை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று ரெயில்வே அதிகாரி ஜெயச்சந்திரன் புக்கிங் ஏஜெண்டுகள் மூலம் யாரையும் பொருட்கள் ஏற்ற அனுமதிக்க கூடாது என்றும் அவர்களை உள்ளே வர விடக்கூடாது என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதனை கண்டித்து திண்டுக்கல் நிலைய அலுவலர் ராதா கிருஷ்ணனிடம் ஊழியர்கள் மற்றும் லோடு மேன்கள் புகார் மனு அளித்தனர். இது குறித்து புக்கிங் ஏஜெண்டு நாகராஜ் தெரிவிக்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கோட்ட அலுவலர் வேறு ஏதோ காரணத்துக்காக எங்களை அனுமதிக்க மறுக்கிறார்.

    தினசரி ரூ.30 லட்சம் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று எடுத்து கூறியும் அவர் கேட்கவில்லை. நிலைய அலுவலரிடம் புகார் அளித்தும் அவர் இது தனது கட்டுப்பாட்டில் வராது என கைவிரித்து விட்டார். எனவே நாங்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார். #struggle

    ×