search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway officer condemning"

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். #struggle

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 32 புக்கிங் ஏஜெண்டுகள் உள்ளனர். இவர்கள் மூலம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு காய்கறிகள் ஏலக்காய், முருங்கை, நெல்லிக்காய், வாழை இலை, மலர்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தினசரி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் 10 டன் அளவுக்கு விளை பொருட்கள் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திண்டுக்கல் கோட்ட வர்த்தக அலுவலராக பொறுப்பேற்றுள்ள ஜெயச்சந்திரன் என்பவர் கடந்த சில மாதங்களாக புக்கிங் ஏஜெண்டுகள் மூலம் எந்த பொருட்களையும் ரெயிலில் ஏற்றக் கூடாதுஎன உத்தரவு பிறப்பித்தார்.

    கடந்த 4 நாட்களாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரெயில்கள் மூலம் காய்கறிகள் மற்றும் விளை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று ரெயில்வே அதிகாரி ஜெயச்சந்திரன் புக்கிங் ஏஜெண்டுகள் மூலம் யாரையும் பொருட்கள் ஏற்ற அனுமதிக்க கூடாது என்றும் அவர்களை உள்ளே வர விடக்கூடாது என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதனை கண்டித்து திண்டுக்கல் நிலைய அலுவலர் ராதா கிருஷ்ணனிடம் ஊழியர்கள் மற்றும் லோடு மேன்கள் புகார் மனு அளித்தனர். இது குறித்து புக்கிங் ஏஜெண்டு நாகராஜ் தெரிவிக்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கோட்ட அலுவலர் வேறு ஏதோ காரணத்துக்காக எங்களை அனுமதிக்க மறுக்கிறார்.

    தினசரி ரூ.30 லட்சம் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று எடுத்து கூறியும் அவர் கேட்கவில்லை. நிலைய அலுவலரிடம் புகார் அளித்தும் அவர் இது தனது கட்டுப்பாட்டில் வராது என கைவிரித்து விட்டார். எனவே நாங்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார். #struggle

    ×