செய்திகள்
நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.

ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்- போலீசார் வழங்கினர்

Published On 2020-07-12 13:27 GMT   |   Update On 2020-07-12 13:27 GMT
பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையம் சார்பில் கோவை ரோடு சங்கம்பாளையத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையம் சார்பில் கோவை ரோடு சங்கம்பாளையத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமை தாங்கி, நிவாரண பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும்.

சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர், நரிக்குறவர்கள் உள்பட 110 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் சகாயராஜ் மற்றும் போலீசார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News