செய்திகள்
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்

நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்- கலெக்டர் தகவல்

Published On 2020-07-11 10:56 GMT   |   Update On 2020-07-11 10:56 GMT
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.
தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள், குக்கிராமங்களில் கொரோனா தொற்று தொகுப்பாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நகராட்சி பகுதிகளான போடியில் 8 வார்டுகள், தேனி அல்லிநகரத்தில் 13 வார்டுகள், சின்னமனூரில் 14 வார்டுகள், கம்பத்தில் 26 வார்டுகள், கூடலூரில் 3 வார்டுகள், பெரியகுளத்தில் 8 வார்டுகள் என மொத்தம் 72 வார்டு பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

பேரூராட்சி பகுதிகளான ஆண்டிப்பட்டியில் 5 வார்டுகள், க.புதுப்பட்டியில் 2 வார்டுகள், அனுமந்தன்பட்டியில் 1 வார்டு, வடுகபட்டியில் 2 வார்டுகள், பழனிசெட்டிபட்டியில் 4 வார்டுகள், உத்தமபாளையத்தில் 6 வார்டுகள் என மொத்தம் 20 வார்டுகள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் அம்மச்சியாபுரம், கொத்தபட்டி, திருமலாபுரம் ஊராட்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகள், கீழமஞ்சிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், போடி ஒன்றியத்தில் கோடாங்கிபட்டி, கடமலை-மயிலை ஒன்றியத்தில் பொம்மராஜபுரம், வருசநாடு, தேக்கம்பட்டி, மீனாட்சிபுரம். பெரியகுளம் ஒன்றியத்தில் எ.புதுப்பட்டி, எண்டபுளி, குள்ளப்புரம், வரதராஜநகர், ஜெயமங்கலம், அழகர்சாமிபுரம், பெருமாள்புரம், மேல்மங்கலம், சில்வார்பட்டி, வடபுதுப்பட்டி, தேனி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, மதுராபுரி, தேனி ஒன்றியத்தில் அரண்மனைப்புதூர், தர்மாபுரி, அன்னஞ்சி, உத்தமபாளையம் ஒன்றியத்தில் ராயப்பன்பட்டி ஆகிய கிராமங்களும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து பொருட்கள் தொடர்பான கடைகள் மற்றும் மருத்துவமனைகள் மட்டும் செயல்படும். வெளியாட்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News