செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய காரணம் என்ன?- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

Published On 2020-07-11 08:59 GMT   |   Update On 2020-07-11 08:59 GMT
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய காரணம் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

சென்னை அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட அத்திப்பட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்து ஆய்வு செய்த பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையை பொறுத்த வரை முழு ஊரடங்கால் தொடர் பாதிப்பை தடுக்க முடிந்தது. பரிசோதனை கூடுதலாக செய்யப்பட்டது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். பொதுமக்கள் அனைவரும் முழு கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றினார்கள்.

ஊரங்குக்குப் பின்னும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், வயதானவர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News