செய்திகள்
சரக்கு ரெயிலில் வந்த மக்காச்சோளம்

சேலத்துக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் மக்காச்சோளம் வந்தது

Published On 2020-07-11 08:50 GMT   |   Update On 2020-07-11 08:50 GMT
பீகார் மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் மக்காசோளம் சரக்கு ரெயிலில் சேலம் சத்திரம் ரெயில்வே கூட்ஸ் ஷெட்டிற்கு வந்தது.
சேலம்:

சேலம் சத்திரம் ரெயில்வே கூட்ஸ் ஷெட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து சர்க்கரை, சிமெண்டு, அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படுவது வழக்கம். அவ்வாறு வரும் பொருட்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் மக்காசோளம் சரக்கு ரெயிலில் நேற்று காலை சேலம் சத்திரம் ரெயில்வே கூட்ஸ் ஷெட்டிற்கு வந்தது. இதையடுத்து மக்காசோளம் மூட்டைகளை சேலம் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்க லாரிகளில் ஏற்றும் பணியில் அங்கிருந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன் பின்னர் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் மக்காச்சோளம் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. 
Tags:    

Similar News