செய்திகள்
நிவாரண தொகை வழங்கக்கோரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

ஊரடங்கால் வருமானமின்றி தவிப்பு - நிவாரண தொகை வழங்கக்கோரி டிரைவர்கள் போராட்டம்

Published On 2020-07-09 12:54 GMT   |   Update On 2020-07-09 12:54 GMT
ஊரடங்கால் டிரைவர்கள் ஆயிரக்கணக்கானோர் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து டிரைவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திண்டுக்கல்:

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. இதில் இ-பாஸ் இல்லாமல் வாகனங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாடகை வாகனங்கள் ஓட்டும் தொழில் முற்றிலும் நலிவடைந்துவிட்டது. மேலும் மாநிலம் முழுவதும் கார், வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்களின் டிரைவர்கள் ஆயிரக்கணக்கானோர் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து டிரைவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான டிரைவர்கள் கலந்துகொண்டு கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். அப்போது டிரைவர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். நிவாரண தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Tags:    

Similar News