செய்திகள்
அம்மன் அர்ச்சுனன் எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா

Published On 2020-07-05 04:11 GMT   |   Update On 2020-07-05 04:11 GMT
கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை:

கோவை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 275 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகள், மருமகன், பேத்திக்கு கடந்த வாரம் கொரோனா உறுதியான நிலையில் தற்போது அர்ச்சுனனுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

ஏற்கனவே அதிமுக, திமுகவில் தலா 4 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Tags:    

Similar News