செய்திகள்
தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 5 முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது

ஆதிச்சநல்லூரில் மேலும் 5 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

Published On 2020-07-02 07:02 GMT   |   Update On 2020-07-02 07:02 GMT
ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில் தோண்டப்பட்ட ஒரு பள்ளத்தில் 4 முதுமக்கள் தாழிகளும், மற்றொரு பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளையில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகிலும், கால்வாய் ரோடு பகுதியிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அகழாய்வு நடைபெறுகிறது.

தொல்லியல் துறை அதிகாரிகள் பாஸ்கர், லோகநாதன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஏற்கனவே 6 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 3 முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையில் இருந்தன. சிவகளை பரும்பு பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் 20-க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில் தோண்டப்பட்ட ஒரு பள்ளத்தில் 4 முதுமக்கள் தாழிகளும், மற்றொரு பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளங்களை தார்ப்பாயால் மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு அகழாய்வு நடைபெறுகிறது. 
Tags:    

Similar News