செய்திகள்
வெள்ளி, செம்பு நாணயங்கள்

அழகன்குளத்தில் ஆங்கிலேயர் கால வெள்ளி, செம்பு நாணயங்கள்

Published On 2020-06-30 07:56 GMT   |   Update On 2020-06-30 07:56 GMT
அழகன்குளம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் வக்கீல் அசோகன் என்பவரது பூர்வீக வீடான மாரியப்பா பவனத்தில் ஆங்கிலேயர் காலத்து வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள் கிடைத்துள்ளன.
பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனுக்கு உட்பட்டது அழகன்குளம் கிராமம். பண்டைய காலத்தில் வணிக நகரமாக விளங்கிய இங்கு கடந்த பல ஆண்டுகளாக தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட்டு பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட 13,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அழகன்குளம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் வக்கீல் அசோகன் என்பவரது பூர்வீக வீடான மாரியப்பா பவனத்தில் பழங்கால புத்தகங்களை எடுத்து சுத்தம் செய்துள்ளனர். அப்போது ஆங்கிலேயர் காலத்து வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் 1908, 1918-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற வெள்ளி மற்றும் செம்பு நாணயங்களில் ஒரு அணா, அரையணா என்று மதிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும் இந்த நாணயங்களில் சிலவற்றில் 5-ம் ஜார்ஜ் மன்னரின் உருவமும், சிலவற்றில் 7-ம் எட்வர்டு மன்னரின் உருவமும் உள்ளது. இதில் உள்ள ஒரு நாணயத்தில் சிங்களம் மற்றும் தமிழ் எழுத்துக்கள் உள்ளன.
Tags:    

Similar News