செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா

Published On 2020-06-27 07:48 GMT   |   Update On 2020-06-27 07:48 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 108 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்தது.

நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கணிசமாக உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை  737 ஆக அதிகரித்துள்ளது. இதில் பரமக்குடி அரசு மருத்துவமனை 4 செவிலியர், ராமநாதபுரம்1 லேப் டெக்னீசியன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முககவசம், பிபிடிகிட், கையுறைகள் போன்ற பாதுகாப்பு கவசங்களை முறையாக வழங்காதால் தொற்று பரவியிருக்கலாம் என்ற செய்தி பரவி வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவ பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரத்துறை, காவல்துறை பணியாளருக்கு தொற்று பரவி வருவதால் பணிகளில் தொய்வு அடையும் நிலை உள்ளது.  மேற்கண்ட தகவல் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொடர்ந்து சுகாதார பணிகளை சிறப்பாக செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சை முடிந்து உடல்நலம் பெற்ற நபருக்கு மீண்டும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ள சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News