செய்திகள்
சேதமடைந்துள்ள வாழை மரங்கள்

காரியாபட்டி பகுதியில் பலத்த மழை- வாழை மரங்கள் சேதம்

Published On 2020-06-26 11:59 GMT   |   Update On 2020-06-26 11:59 GMT
காரியாபட்டி பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.
காரியாபட்டி:

காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் நீண்ட நாட்களாக மழை இன்றி தவித்து வந்தனர். ஆதலால் பல கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகள் கூறினர். பலத்த காற்று வீசியதில் நரிக்குடி பகுதியில் உள்ள புளியங்குளம், வேலாயுதபுரம், மிதலைக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கண்ணீருடன் கூறினர்.
Tags:    

Similar News