செய்திகள்
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கியது தமிழக அரசு

Published On 2020-06-25 08:07 GMT   |   Update On 2020-06-25 08:07 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.

தொடர்ந்து சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

இதற்கிடையே மேலும் 4 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடந்த திங்கட்கிழமை அன்று கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில் நேற்றுடன் முடிவடைந்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது.  

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8வது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News