செய்திகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று- அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது

Published On 2020-06-25 07:05 GMT   |   Update On 2020-06-25 07:05 GMT
திருவள்ளூர் மாவட்டம் வங்கனூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.
பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த ஒன்றியத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்களில் 3 பேர் விளக்கணாம்பூடி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதனால் இந்த ஆஸ்பத்திரி கடந்த 3 நாட்களாக மூடப்பட்டது. கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நேற்று முதல் ஆஸ்பத்திரி செயல்பட தொடங்கிய நிலையில், வங்கனூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது. இங்கு சிகிச்சை பெற வருகின்ற நோயாளிகள் விளக்கணாம்பூடி புதூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News