செய்திகள்
ஏரல் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஏரல் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2020-06-08 09:46 GMT   |   Update On 2020-06-08 09:46 GMT
ஏரல் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்படும் சுகாதார பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
ஏரல்:

ஏரல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து ஏரல் போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். தொடர்ந்து ஏரல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டருடன் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர், அந்த பகுதியில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். இதனால் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏரல் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்படும் சுகாதார பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி பிரபா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News