செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா - தமிழகத்தில் 18 பேர் உயிரிழப்பு

Published On 2020-06-07 14:08 GMT   |   Update On 2020-06-07 14:08 GMT
சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்ட தகவலின்படி,

தமிழகத்தில் 1,497 பேர், பிறமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேர் என மொத்தம் 1,515 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டது.  தமிழகத்தில் 1,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவானது இதுவே முதல்முறை ஆகும்.



சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.   சென்னையில் 5ம் நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.   சென்னையில் பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 20,981லிருந்து 22,149 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று ஒரேநாளில் 604 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 இல் இருந்து 16,999 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 5 பேர், அரசு மருத்துவமனைகளில் 13 பேர் என ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இதுவரை 212 பேர் உயிரிழந்துள்ளனர்.    மேலும் தமிழகத்தில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 8வது முறையாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 14,396 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 30,152லிருந்து 31,667 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 15,671 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News