செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருமி நாசினி மூலம் தினமும் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும்- ஊழியர்கள் கோரிக்கை

Published On 2020-06-02 11:32 GMT   |   Update On 2020-06-02 11:32 GMT
கிருமி நாசினி மூலம் தினமும் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தாலுகா, யூனியன், பேரூராட்சி, மின்வாரியம், வேளாண்மை, கல்வி, போலீஸ், தீயணைப்பு, வனத்துறை, கிராம நிர்வாக அலுவலர், அரசு, தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்படுகின்றன. கொரோனா வைரஸ்நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பின் இதில் சில அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கி வந்தன.

இதனால் அவற்றினை தினந்தோறும் அங்கு வரும் சுகாதார பணியாளர்கள் சுத்தம் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் ஊரங்கில் தளர்வு செய்யப்பட்டபின் 50 சதவிகித அலுவலர்களை கொண்டு அலுவலகங்கள் செயல்படலாம் என்று அறிவித்தபின்பு அனைத்து அலுவலகங்களிலும் அரசு பணியாளர்கள் இரு சக்கரவாகனம், அரசு பஸ்களில் வந்து செல்கின்றனர்.

அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் முதலில் பூட்டிவைக்கப்பட்ட அலுவலகத்தை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து பின் திறக்க வேண்டும். ஏனென்றால் பூட்டியஅலுவலகத்திற்குள் தூசிகள் படிந்தும், பல்லி, பூச்சிகள், எலிகள் இறந்தும் துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது. அதனால் நோய்தொற்று அபாயம் உருவாகும். எனவே அவற்றை சுத்தம் செய்த பின் திறப்பதற்கு அனுமதியளிக்கவேண்டும்.

மேலும் கல்வித்துறையில் தற்போது விடுமுறை காலம் என்பதால் அலுவலக பணியாளர்களை தவிர்த்து மற்ற பணியாளர்களை அழைப்பதும் வேறு பணிகள் இல்லாமல் தேவையில்லாமல் அலுவலகத்தில் காத்திருக்கவைப்பதும் வேதனைக்குரியது. எனவே தேவையானபணிக்கு தேவையான பணியாளர்களை மட்டும் அழைத்து உரிய வேலைகளை முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று அரசு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News