செய்திகள்
குழந்தை

அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய கர்ப்பிணிக்கு நடுரோட்டில் குழந்தை பிறந்தது

Published On 2020-06-02 07:08 GMT   |   Update On 2020-06-02 07:08 GMT
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி சென்ற நிலையில் நடுரோட்டில் பெண் குழந்தை பிறந்தது.
விருதுநகர்:

சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி சாலை ஓரங்களில் இருந்து வந்தார். இதனை கண்ட ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி இந்த பெண்ணை 2 நாட்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ சிகிச்சை பிரிவில் அனுமதித்தார்.

இந்த நிலையில் அந்த பெண் ஆஸ்பத்திரி ஊழியர்களின் கண்ணில் படாமல் பிரசவ வார்டில் இருந்து வெளியேறிவிட்டார். அந்த பெண் விருதுநகர் கால்நடை ஆஸ்பத்திரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் அருகில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணுக்கு நடுரோட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் இந்த பெண்ணும், குழந்தையும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரசவ வார்டில் கண்காணிப்பு குறைபாடு காரணமாகவே இந்த பெண் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறியது குறித்து அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News