செய்திகள்
வாழை சாகுபடி

கமுதி அருகே போர்வெல் தண்ணீரில் வாழை விவசாயம்

Published On 2020-06-01 10:09 GMT   |   Update On 2020-06-01 10:09 GMT
கமுதி பசும்பொன் அருகே சடையனேந்தல் விலக்கு ரோட்டில் போர்வெல் தண்ணீரில், வாழை தண்டுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
கமுதி:

கமுதி அருகே கீழ, மேலராமநதி, கிளாமரம், கோரைப்பள்ளம், காவடிபட்டி, கூலிபட்டி, நீராவி கரிசல்குளம், பசும்பொன் ஆகிய பகுதிகளில் ஆண்டு முழுவதும் வாழை விவசாயம் மழைநீரை நம்பாமல், போர்வெல் தண்ணீரால் செய்யப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன் கனமழை, பலத்த இடி, மின்னலுடன் வீசிய சூறாவளி காற்று மற்றும் கொரோனா ஊரடங்கில், வாகன போக்குவரத்து இல்லாததால், மகசூல் கிடைத்த வாழைதார்களை அறுவடை செய்யாமல், வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து, விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் குறைந்த விலைக்கு சாய்ந்த வாழைத்தார்களை, விவசாயிகள் வியாபாரிகளிடம் விற்பனை செய்தனர்.

கொரோனா ஊரடங்கால், விவசாய கூலி தொழிலாளர்கள் பணிக்கு வர தயக்கம் காட்டியவேளையில், கமுதி பசும்பொன் அருகே சடையனேந்தல் விலக்கு ரோட்டில், போர்வெல் தண்ணீரில், வாழை தண்டுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

தற்போது மழை பெய்ததால் வாழை விவசாயம் முன்னேற்றமடையும் என இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News