செய்திகள்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-05-28 12:53 GMT   |   Update On 2020-05-28 15:38 GMT
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா வைரஸ் தொற்று தகவல் குறித்து அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது.

639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக 10,548 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம்.

பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அச்சப்பட தேவையில்லை. சென்னையில் மட்டும் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

1,159 குழந்தைகள் குணப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு. இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் பெருநகரங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் இறப்பு விகிதம் மிகக்குறைவு.

இவ்வாறு விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
Tags:    

Similar News