செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கோவில்களை திறக்க கோரி நூதன போராட்டம்

Published On 2020-05-26 12:22 GMT   |   Update On 2020-05-26 12:22 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கோவில்களுக்கு மட்டும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சஞ்சீவி, ராஜா மற்றும் நிர்வாகிகள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி பட்டத்து விநாயகர் கோவில் முன்பும் போராட்டம் நடைபெற்றது. வடமதுரை பெருமாள் கோவில் முன்பு மாவட்ட செயலாளர் சதீஸ் குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வத்தலக்குண்டுவில் காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் என 3 இடங்களில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடந்தது.

பல்வேறு கோவில்களில் பண்டிகைகள் நடத்தப்படாத நிலையில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருப்பது பக்தர்கள் மனதில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தனர்.

இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News