செய்திகள்
தடை செய்யப்பட்ட பகுதி

5 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் தெருக்களை மூட முடிவு

Published On 2020-05-25 11:26 GMT   |   Update On 2020-05-25 11:26 GMT
ஒரே தெருவில் 5க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த தெருவை மூடி சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நோய் பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஊரடங்கு தளர்வுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா பாதித்தாலும் அவர் வசித்த தெரு 28 நாட்கள் அடைக்கப்பட்டது. பின்னர் இது 14 நாட்களாக குறைக்கப்பட்டது. தெருக்களை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதை சில இடங்களில் வசிக்கும் மக்கள் விரும்பவில்லை.

அடர்த்தியான வீடுகள் உள்ள குடிசைப் பகுதியில் எதிர்ப்புகள் அதிகரித்து பல இடங்களை பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் தடை செய்யப்பட்ட பகுதி அறிவிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து ஒரே தெருவில் 5க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த தெருவை மூடி சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 4 பேர் வரை பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் வசிக்கும் வீடுகள் மட்டும் தனிமைப்பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

குடிசைப் பகுதி வீடுகளில் தனிமையில் இருக்க போதுமான அளவு இடவசதி இருக்காது. எனவே இதுபோன்ற வீடுகளில் கொரோனா பாதித்தவர்களுடன் வசிக்கும் பாதிப்பு இல்லாதவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.
Tags:    

Similar News