செய்திகள்
தட்டச்சு பள்ளி

மூடிக்கிடக்கும் தட்டச்சு பள்ளிகள் திறக்கப்படுமா?

Published On 2020-05-23 07:29 GMT   |   Update On 2020-05-23 07:29 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் மூடிக்கிடக்கும் தட்டச்சு பள்ளிகள் திறக்கப்படுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ-மாணவிகள் தங்கள் திறனை மேம்படுத்தும் வகையில் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி பெறுவது வழக்கம். இதனை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் 150 தட்டச்சு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

தற்போது கொரோனா ஊரடங்கால் தட்டச்சு பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் தட்டச்சு பள்ளி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மாணவ-மாணவிகளும் விடுமுறை நாட்களில் தட்டச்சு படிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் சங்க செயலாளர் நாராயணன் கூறியதாவது:-

நாங்கள் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நடத்தி வருகிறோம். இதன்மூலம் மாணவர்களின் திறனை வளர்த்துக்கொள்ள பயன் உள்ளதாக இருந்தது. பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ-மாணவிகள் அதிக அளவில் தட்டச்சு படிக்க வருவார்கள். ஒரே நேரத்தில் அதிக மாணவர்கள் வருவது கிடையாது. குறைந்த அளவு மாணவர்கள் ஒரு மணி நேரம் வருவார்கள். அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற முடியும்.

ஆனால் தற்போது கொரோனா காரணமாக பயிற்சி ஏதும் நடைபெறவில்லை. இதனால் தட்டச்சு பள்ளிகள் மூடியே கிடக்கிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தட்டச்சு பள்ளிகளை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News