செய்திகள்
வாழைகள் நாசம்

செங்கோட்டை அருகே பலத்த சூறைக்காற்று- 5 ஆயிரம் வாழைகள் நாசம்

Published On 2020-05-22 15:19 GMT   |   Update On 2020-05-22 15:19 GMT
செங்கோட்டை அருகே பலத்த சூறைக்காற்று வீசியதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது.
செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளான பண்பொழி, செங்கோட்டை, புளியரை, பூலாங்குடியிருப்பு, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மா, தென்னை, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது பண்பொழி திருமலைக்குமாரசுவாமி அடிவார பகுதிகளில் செவ்வாழை மற்றும் பல்வேறு இன வாழைகளை அதிகளவு பயிரிட்டுள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் வாழை மரங்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்காசி, செங்கோட்டை, பண்பொழி வடகரை, பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் செங்கோட்டை, புளியரை, பூலாங்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. எனவே தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News