செய்திகள்
காய வைக்கப்பட்டுள்ள நெல் (கோப்புப்படம்)

திருவெண்ணைநல்லூரில் பலத்த மழை- 150 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

Published On 2020-05-21 13:59 GMT   |   Update On 2020-05-21 13:59 GMT
திருவெண்ணைநல்லூரில் நேற்று பலத்த மழை பெய்ததால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு அடுக்கி வைப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன.
திருவெண்ணைநல்லூர்:

திருவெண்ணைநல்லூரில் பேரூராட்சி அருகே உள்ள வாடகை கட்டிடத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் 45 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த கட்டிடம் ஓடால் ஆனது. இதனால் இங்கு வைக்கப்படும் நெல், மணிலா, எள் போன்ற தானியங்கள் அடிக்கடி மழையில் நனைந்து சேதமாகிறது. மேலும் கட்டிடம் சிறிய அளவில் உள்ளதால் தானிய மூட்டைகள் சேமித்து வைக்க முடியாமல் கட்டிடத்தின் முன்புள்ள சாலையில் அடிக்கி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் திருவெண்ணைநல்லூரில் நேற்று பலத்த மழை பெய்தது. ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு உள்ள சாலையில் அடுக்கி வைப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதில் நெல் மூட்டைகள் முற்றிலும் நனைந்து சேதமானது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, எங்களுக்கு பாதுகாப்பான, அரசுக்கு சொந்தமான ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். நாங்கள் கொண்டு வரும் தானியங்கள் மழை காலத்தில் நனைந்து சேதமாகிறது. மேலும் தானியங்களுக்கான உரிய விலையும் கிடைக்கவில்லை.

இவ்வாறு கூறினர்.


Tags:    

Similar News