செய்திகள்
சலவை தொழிலாளர்கள்

ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவிக்கும் சலவை தொழிலாளர்கள்

Published On 2020-05-19 10:51 GMT   |   Update On 2020-05-19 10:51 GMT
ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவிக்கும் சலவை தொழிலாளர்கள் நிவாரணம் வழங்ககோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான சலவை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் தங்களது துணிகளை சலவைக்கு கொடுக்காமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு சலவை தொழிலாளர்‌ மத்திய சங்கம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு நடவடிக்கையால் சலவை நிலையம் மற்றும் நடமாடும் சலவையகம் நடத்திவரும் அனைவரும் தொழில் முடக்கத்தால் குடும்ப செலவுக்கு வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதில் பலர் நலவாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளோம். எங்கள் மீது அரசு கருணைக் கொண்டு ரூ.2000 நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News