செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கோயம்பேடு உணவு தானிய சந்தை மூடல்- அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-05-13 07:07 GMT   |   Update On 2020-05-13 07:07 GMT
சென்னை கோயம்பேடு உணவு தானிய சந்தை மூடப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை கோயம்பேடு சந்தை வழியே கொரோனா பரவல் ஏற்பட்ட நிலையில், அதனை தடுக்கும் வகையில் சந்தை மூடப்பட்டது. இதனால், சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் உணவு தானிய சந்தையில் வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

காய்கறி விற்பனையுடன் தொடர்பு இல்லாத நிலையில் கோயம்பேட்டில் அனைத்து வளாகங்களும் மூடப்பட்டது. வளாகங்கள் மூடலால் சில விற்பனையாளர்களால் உணவு தானிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவித்தார்.

இவ்வழகை விசாரித்த நீதிபதிகள், கோயம்பேடு உணவு தானிய சந்தை மூடப்பட்டது தொடர்பாக வருகிற 26-ந்தேதிக்குள் தமிழக அரசு, சிஎம்டிஏ, காவல் ஆணையர், கொரோனா ஒழிப்பு சிறப்பு அதிகாரி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News