செய்திகள்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி

சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-05-11 14:38 GMT   |   Update On 2020-05-11 14:38 GMT
மத்திய அரசை கண்டித்தும், அதனை கைவிட வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நெல்லையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை:

தொழிலாளர்கள் போராடி பெற்ற 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றிய மத்திய அரசை கண்டித்தும், அதனை கைவிட வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நெல்லையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வண்ணார்பேட்டை போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.

மாநிலக்குழு பெருமாள் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் செண்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய செயலாளர் கருமலையான், மாவட்ட செயலாளர் மோகன், நிர்வாகிகள் சுடலைராஜ், ராஜன், சக்திவேல், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சங்க நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் உள்ள சங்க அலுவலகங்கள் மற்றும் வீடுகள் முன்பும் நின்று போராட்டம் நடத்தினர்.
Tags:    

Similar News