செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பிசிஆர் ஆய்வக வழக்கு- மத்திய, மாநில அரசுகள் பதில் தர சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-05-04 08:56 GMT   |   Update On 2020-05-04 08:56 GMT
பிசிஆர் ஆய்வகம் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பரிசோதனைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 1200 ஆய்வகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 1200 ஆய்வகங்களையும் பயன்படுத்தினால் நாள் ஒன்றுக்கு 3.70 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்ய முடியும் என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை ஆராய்ந்த நீதிபதிகள்,  ஐசிஎம்ஆர் தவிர பிற ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள பிசிஆர் ஆய்வகங்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்று கேள்வி எழுப்பினர். 

மேலும் மனுதாரரின் மனுவிற்கு மத்திய, மாநில அரசுகள் மே 12ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News