செய்திகள்
விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் மழை பெய்த காட்சி.

விழுப்புரம் பகுதியில் இன்று பலத்த மழை

Published On 2020-04-29 14:22 GMT   |   Update On 2020-04-29 14:22 GMT
விழுப்புரம் பகுதியில் இன்று இடியுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடைவெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் வீட்டுக்குள் ளேயே முடங்கிய வண்ணம் உள்ளனர். எனவே எப்போது மழை பெய்யும் என்று எதிர் பார்த்திருந்த வேளையில் இன்று அதிகாலையில் கருமேகங்கள் சூழ்ந்தன. காலை 6.30 மணிக்கு பலத்த மழை இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் நகர் பகுதியான கோலியனூர், வளவனூர், பெரும்பாக்கம், அரசூர், சாலைஅகரம், அய்யூர் அகரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலைய தாழ்வான பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இந்த மழையால் ஓரளவு வெப்பம் தணிந்தது.
Tags:    

Similar News