செய்திகள்
கட்டில் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதாவிடம் வழங்கியபோது எடுத்த படம்.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை சார்பில் கொரோனா பாதித்தவர்களுக்கு கட்டில், மருத்துவ உபகரணங்கள்

Published On 2020-04-29 12:25 GMT   |   Update On 2020-04-29 12:25 GMT
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை சார்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைக்கு அளித்தனர்.

திருவெறும்பூர்:

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்புத்துறை நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலை சார்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைக்கு அளித்தனர்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பரவலை இதனை கட்டுபடுத்தவும், பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான இருப்புகள் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரூ.55 லட்சம் மதிப்பிலான கட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் சிரிஷ்கரே அறிவுறுத்தலின் படி ஊழியர்கள் தயாரித்தனர்.

அவ்வாறு தயார் செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களை துப்பாக்கி தொழிற்சாலையின் பாதுகாப்பு அலுவலர் கார்த்தி கேஷ் , திருச்சி அரசு மருத்து வமனை டீன் வனிதாவிடம் ஒப்படைத்தார்.

கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலையில் தங்களது பங்களிப்பாக இதனை வழங்குவதாக துப்பாக்கி தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News