செய்திகள்
முக ஸ்டாலின்

மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்- முக ஸ்டாலின் கண்டனம்

Published On 2020-04-29 10:20 GMT   |   Update On 2020-04-29 10:20 GMT
மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்துள்ளது தமிழக ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை:

திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

ஜல்சக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்திருப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல்.

காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல்.

இதுதொடர்பாக வெளியிட்ட அரசிதழை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தவறும் பட்சத்தில் மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய பேரமைப்புகளை ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும்.

எனவே, தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி இந்த முடிவை கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News