செய்திகள்
கைது

துறையூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது

Published On 2020-04-27 11:16 GMT   |   Update On 2020-04-27 11:20 GMT
துறையூர் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கைது செய்தனர்.

துறையூர்:

துறையூர் அருகே உள்ள பச்சைமலை கோம்பை ஊராட்சிக்குட்பட்ட குண்டூர் பகுதியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில், முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில், துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையில், உதவி ஆய்வாளர் கலைச் செல்வன், மற்றும் போலீசார் மணிகண்டன், அசோக் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது அதே ஊரை சேர்ந்த கோம்பை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ராஜேந்திரன் என்பவர் வீட்டுக்கு பின்னால் மூன்று பேரல்களில் 500 லிட்டர் அளவுள்ள கள்ளச்சாராய ஊறல் மற்றும் 10 லிட்டர் அளவுள்ள கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளச்சாராய ஊறல் போட்டது ராஜேந்திரன் என்பதும், அவருக்கு உதவியாக அவருடைய உறவினர் சித்திரன் என்பவரும் இருந்தது தெரியவந்தது. மேலும் இவர்களிட மிருந்து சாராயத்தை மொத்த மாக துறையூரை சேர்ந்த ஹரி (40), சொரத்தூரை சேர்ந்த பிரகாஷ் (45) ஆகிய இருவ ரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஹரி, பிரகாஷ் இருவரையும் துறையூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News